உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதிகளில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை  ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.‌ வரதராஜப் பெருமாள், கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், கைலாசபட்டி  கைலாசநாதர், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள்,‌ வீச்சு கருப்பணசாமி, சச்சுமடை பாண்டி முனீஸ்வரர்,சில்வார்பட்டி ஸ்ரீ நெல்லையப்பர்- ஸ்ரீ காந்திமதி அம்மன், ஸ்ரீ சாமுத்தாயம்மாள், ஸ்ரீ சாஸ்தா  பெருமாள் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். வடுகபட்டி பகவதி அம்மன் கோயில், தேவானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மற்றும்  குலதெய்வம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !