சிவன்மலையில் ஆடி சஷ்டி விழா
ADDED :1182 days ago
பொங்கலூர்: சிவன்மலை சஷ்டி சங்க குழு சார்பில், 74 ஆம் ஆண்டு ஆடி சஷ்டி விழா நடந்தது. சஷ்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவன்மலை முருகனுக்கு அபிஷேக ஆராதனை, நாதஸ்வர கச்சேரி, நேற்று காலை அடிவார மண்டபத்திலிருந்து தீர்த்தக் கலசம் எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மதியம் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு சிவசக்தி மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சஷ்டி சங்கம் செய்தது.