உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெங்கமலை கோயிலில் ஆடி18 கொண்டாட்டம்

ரெங்கமலை கோயிலில் ஆடி18 கொண்டாட்டம்

வேடசந்தூர்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில், மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது ரங்கமலை கணவாய். இங்கே உள்ள ரங்கமலை 5 கிலோ மீட்டர் உயரம் கொண்டது. இதில் மூன்று கிலோ  மீட்டர் உயரத்தில் மல்லீஸ்வரன் கோவிலும், 5 வது கிலோ மீட்டர் உச்சியில் கம்பமும் உள்ளது. கம்பத்திற்கு பெரும்பாலும் யாரும் செல்வதில்லை.

இங்கு ஒவ்வொரு ஆண்டு ஆடி 18 ஐ முன்னிட்டு, மலையில் உள்ள மல்லீஸ்வரன் கோயிலுக்கு, வேடசந்தூர், கல்வார்பட்டி, அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக சென்று  வணங்கி வருவார். அதில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தான் கூடுதலான எண்ணிக்கையில் சென்று திரும்புவார். நேற்று ஆடி 18 என்பதால் அதிகாலை முதலே மலைக்குச் சென்ற  பக்தர்கள், மல்லீஸ்வரனை வணங்கிவிட்டு மெதுவாக திரும்பி வந்தனர். வீடுகளுக்கு திரும்பும் மக்கள் மலையில் உள்ள போதைப்புல் என்ற ஒரு வித புல்லை தங்களது கால்நடைகளுக்கு வழங்குவதற்காக  ஒரு கைப்பிடி அளவு எடுத்துச் செல்வது வழக்கம். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் பாதுகாப்புடன் விழா நடைபெறுவது வழக்கம். விழா குழுவினர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !