உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியமல்லம்மாள் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கரியமல்லம்மாள் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம்  தொடங்கி யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது.அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அம்மன் உருவம் பொறித்த கொடியை கிராமத்தின் முக்கிய  விதிகளில் கொண்டுவரப்பட்டு கொடிமரத்திற்கு கட்டப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆக.11ம் தேதி விளக்கு பூஜை, 12ம் தேதி பொங்கல் விழா, 13ம் தேதி அக்கினிசட்டி,  சேத்தாண்டி வேட்டையாடுதல், ஆயிரம் கண் பானை, முளைப்பாரி கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோன்று கமுதி அருகே கீழராமநதியில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல்  விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !