அம்மன் சிலை மீது நாக பாம்பு; பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம்
ADDED :1259 days ago
உளுந்துார்பேட்டை : ஏ.புத்துார் முத்துமாரியம்மன் கோவில் கருவறையில் அம்மன் சிலை மீது நாக பாம்பு படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.புத்துார் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம், சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. அதனையொட்டி பெண்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்குச் சென்று சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் கோவில் கருவறையில் அம்மன் சிலை மீது நாக பாம்பு ஏறி படமெடுத்து ஆடியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பக்தர்கள் பரவசமடைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு, அம்மன் சிலை மீதிருந்த பாம்பு தானாக கீழே இறங்கி வெளியேறியது.