மறப்போம்! மகிழ்வோம்!
ADDED :1168 days ago
மனநல மருத்துவரை பார்க்க வந்த ஜேம்ஸ் கவலையாக இருந்தார். அவரை விசாரித்ததில் ‘தான் தொழிலில் நஷ்டம் அடைந்துவிட்டேன்’ என தெரிவித்தார்.
இதை கேட்ட மருத்துவர், ‘இது ரொம்ப கஷ்டமான சூழல்தான். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவீர்கள். சரி. இந்த சம்பவம் எப்போது நடந்தது’ எனக்கேட்டார்.
அதற்கு அவர், ‘இது நடந்து பத்து வருடம் இருக்கும்’ என்றார்.
அவ்வளவுதான் அதைக்கேட்டவருக்கு தலை சுற்றியது.
பார்த்தீர்களா... இதுபோல் பலரும் இருப்பதை பார்க்கலாம். கசப்பான சம்பவங்களை மறக்காமல் அதையே நினைவில் வைத்திருப்பர். இதனால் மனம்தான் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த தருணத்தில் நடக்கும் கசப்பான சம்பவங்களை அப்போதே மறந்துவிடுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்.