யானைக்கு வந்த ஆசை
ADDED :1233 days ago
அரண்மனை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் மன்னரிடம் முறையிட்டனர். அவரோ அதை பெரிதாக எடுக்கவில்லை. இதை அறிந்த முல்லா, ‘‘யானையை கட்டிப்போடுங்கள். யாராவது கேட்டால் என் பெயரைச்சொல்லுங்கள்’’ என்றார். இதனால் கோபப்பட்ட மன்னர் அவரை அழைத்து, ‘‘உனக்கு அவ்வளவு துணிச்சலா’’ எனக் கேட்டார். அதற்கு அவர், ‘‘அந்த யானைக்கு திருமண ஆசை வந்துவிட்டது. இதற்காக ஒரு பெண் யானையைத் தேடுகிறோம். எனவே அதற்குள் வேறு ஏதாவது செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளோம்’’ என்றார். மன்னரும் அப்பகுதிக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் யானை ஏற்படுத்திய சேதத்தை பார்த்து அதிர்ச்சியுற்றார். முல்லாவின் சாமார்த்தியத்தை அறிந்த அவர் நஷ்ட ஈடு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.மக்கள் முல்லாவிற்கு நன்றி சொன்னார்கள்.