சிங்கம்புணரியில் தயாரான 18 அடி உயர நேர்த்திக்கடன் அரிவாள்கள்
ADDED :1225 days ago
சிங்கம்புணரி: அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பருக்கு சிங்கம்புணரியில் 18 அடி உயர நேர்த்திக்கடன் அரிவாள்கள் தயார் செய்யப்பட்டன.
இக்கருப்பர் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக அரிவாள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் ஜெயங்கொண்டநிலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் தேன்மொழி குடும்பத்தினர் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடனாக 18 அடி உயரத்தில் இரண்டு அரிவாள்கள் வழங்க முடிவு செய்தனர். சிங்கம்புணரியில் உள்ள அரிவாள் பட்டறை உரிமையாளர் சேகரிடம் அரிவாள் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர்கள் ஏழு நாட்கள் விரதம் இருந்து 18 அடி உயர அரிவாள்களை செய்தனர். தல 110 கிலோ எடை கொண்ட இந்த அரிவாள்கள் நேற்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு லாரியில் ஏற்றி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.