உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

வில்லியனுார் : வில்லியனுார் மார்க்கெட் வீதி ஏழை மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வில்லியனுார் மார்க்கெட் வீதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் 94ம் ஆண்டு செடல் விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 11ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது. நேற்று செடல் திருவிழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சாகை வார்த்தல், மாலை 3:00 மணிக்கு மேல் செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணியளவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி, மின் அலங்காரத்தில் தேர்பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !