சித்தானந்த சுவாமி கோவிலில் வளர்பிறை பிரதோஷம்
ADDED :1266 days ago
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில்,நேற்றுவளர்பிறைபிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில்உள்ளகுரு சித்தானந்த சுவாமி கோவிலில்,ஆடி மாதவளர்பிறைபிரதோஷ சிறப்பு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. அதனையொட்டி, நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.பிரதோஷ பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தி பகவானை, பக்தர்கள் சமூக இடைவெளியை பின் பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.