உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

முத்து மாரியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

தர்மபுரி, விஸ்வகர்மா முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. தர்மபுரி, துரைசாமிநாயுடு தெருவிலுள்ள விஸ்வகர்மா முத்து மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன், 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 7ல் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின், இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அன்றிரவு திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு கூழ்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !