கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம்
ADDED :1489 days ago
செஞ்சி: ஆடி பௌர்ணமியை முன்னிட்டு செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. ஆடி பௌர்ணமியை முன்னிட்டு செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 10 மணிக்கு சக்தி கரகமும், மாரியம்மன், செல்லியம்மன், பூவாத்தம்மன் வீதி உலா வாணவேடிக்கைகளுடன் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.