உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் ராகவேந்திரர் சுவாமிக்கு ஆராதனை வைபவ விழா

காரமடையில் ராகவேந்திரர் சுவாமிக்கு ஆராதனை வைபவ விழா

மேட்டுப்பாளையம்: காரமடையில் ராகவேந்திரர் சுவாமிக்கு, ஆராதனை விழா நடந்தது.

காரமடையில் ஜெய மாருதி, ராகவேந்திரர் கோவில் உள்ளது. இங்கு ராகவேந்திரர் சுவாமியின், 351ம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. காலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் வைபவம் துவங்கியது. சுப்ரபாதமும், கணபதி ஹோமம், நவகிரக, சுதர்சன, லட்சுமி, நரசிம்மர், ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம் மகாவிஷ்ணு ஹோமம் ஆகியவை செய்த பின்பு, ராகவேந்திரர் சுவாமிக்கு மூலமந்திரம் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. குரு ஸ்தோத்திர பாராயணம், மங்கள ஆரத்தி செய்த பின்பு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ராகவேந்திர பஜனை பாடல்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. மங்கள ஆரத்தியுடன் ஆராதனை வைபவம் நிறைவேற்றது. விழா ஏற்பாடுகளை ஜெய மாருதி ராகவேந்திரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !