உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி கோயில் விழாவில் சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்

கமுதி கோயில் விழாவில் சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்

கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழா காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜை நடந்தது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பொங்கல் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு பக்தர்கள் அக்கினிசட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் தேசியக்கொடி உடன் பாரம்பரிய முறைப்படி கம்பளத்து தேவராட்ட நடனமாடினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினர்.கரியமல்லம்மாள் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் கமுதி சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !