உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி கடைசி சனி பூஜை

கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி கடைசி சனி பூஜை

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

உற்சவர் கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கும், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் துளசி, சம்பங்கி மற்றும் கதம்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாவராதனைகள் நடந்தது. ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் ருக்மணி சத்தியபாமா ராஜகோபால சுவாமி கோவிலிலும் ஆடி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !