காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வெள்ளி பொருட்கள் காணிக்கை
ADDED :1483 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் செட்டி குடும்பத்தினர் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்களை காணிப்பாக்கம் விநாயகர் கோயில் துணைக்கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இரண்டரை கிலோ வெள்ளி அணி கலன்கள் சாமிக்கு அலங்கரிக்க (அஸ்தம், கண்டம் ,சங்கு , சக்கரம் மற்றும் கிரீடம்) காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யா சாகர் ரெட்டி யிடம் வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினார்கள்.