உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோவில் கிடாய் வெட்டு விழா

அய்யனார் கோவில் கிடாய் வெட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை வளர்த்தாருடைய அய்யனார் கோவில், ஆடி பூஜை விழாவை முன்னிட்டு, கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வயதான அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் செட்டியமடை மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து அன்னதானத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !