திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை
ADDED :1204 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை நடைபெற்றது.
ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடைபெற்றது. சண்முகார்சனையில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகம் கொண்ட சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.