குத்துக்கல்வலசையில் முளைக்கட்டு உற்ஸவ விழா
ADDED :1204 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி, குத்துக்கல்வலசையில் காந்தாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் காந்தாரியம்மன், குத்துக்கல் முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று இரவில் அக்னி சட்டி, அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை காலையில் பால்குடம், மாவிளக்கு, கூட்டு பொங்கல் உள்ளிட்டவைகள் நடக்கிறது. பகலில் அன்னதானம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.