தீபாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
ADDED :1147 days ago
புவனகிரி: புவனகிரி அடுத்த கீழமணக்குடி தீபாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா தீ மிதி உற்சவத்துடன் நடந்து வருகிறது. தற்போது 59 வது ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆலங்கார நிகழ்ச்சிகளுக்குப் பின் அம்மன் வீதியுலா காட்சியும் நடந்தது. கடந்த 12 ம் தேதி திருவிளக்கு பூஜை வெகுவிமர்சியாக நடந்ந நிலையில்,கடந்த 14 ம் தேதி மாலை ஊரணி பொங்கல் வைத்து அப்பகுதியினர் வழிபாடு நடத்தினர். நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. காப்புக்கட்டிக் கொண்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை அப்பகுதி விழா குழுவினர் செய்திருந்தனர்.