பிறருக்கான பிரார்த்தனை
ADDED :1148 days ago
ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சூரியனின் வெப்பத்தை அவரால் தாங்க முடியவில்லை. அருகே இருந்த மரநிழலில் ஒதுங்கினார். அவருக்கு உடலும், உள்ளமும் குளிர்ந்தது. இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். நாம் நிழலுக்காக இந்த மரத்தின் அருகே ஒதுங்கினோம். ஆனால். விவசாயம் செய்பவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் இந்தவெயிலை எப்படி தாங்குவார்கள், என கவலைப்பட்டார். அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.
மேகம் கூடின. வெயிலின் தாக்கம் குறைந்தது. உண்மைக்கு பலன் உண்டு என்பதை உணர்ந்தார் அவர்.