செயல் பெரியது
ADDED :1148 days ago
* கடலளவு சொல்லை விட கடுக்களவு செயல் பெரியது.
* கோபத்தில் கொந்தளிப்பவனை சமாளிக்க சிறந்த வழி அமைதியாக இருப்பது தான்.
* குறைகளை சுற்றிக்காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.
* நமக்காக பிறர் கண்ணீர் சிந்தினால் அதுவே மிகுந்த புண்ணியத்தை தரும்.
* தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம்.
* பகட்டான உடுப்பும், நடத்தையும் இறைவனுக்கு புறம்பானவை.
* பிறர் குற்றங்களை கவனியாதே! எந்தக்குற்றமும் செய்யாதே!
– பொன்மொழிகள்