உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மூணாறில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மூணாறு: தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் கேரளாவில் இன்று கொண்டாடப்பட்டது.

அதன்படி மூணாறில் காளியம்மன், நவகிரக, கிருஷ்ணன் கோயில் சார்பில் 22ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராதை, கண்ணன் வேடமணிந்து மழலையர்,சிறுவர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் வலம் வந்து காளியம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. அதில் மழலையர்களுடன் பெற்றோரும் பங்கேற்றனர். அதன்பிறகு கிருஷ்ணருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. கோயிலில் உரியடி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !