உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் கோலாகலம்

தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் கோலாகலம்

கூடலூர்: கூடலூர், தொரப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சிறப்பாக நடந்தது.

கூடலூர் தொரப்பள்ளி பகுதியில், ஸ்ரீராம பாலகோகுலம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில, மாலை 4:15 மணிக்கு குணில் பகுதியிலிருந்து கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு சேவாபாரதி மாநில செயலாளர் சரத் தலைமை வகித்தார். ஊர்வலத்தை ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை கோபியர் வேடமிட்டு பங்கேற்றனர். இவர்களை செண்டை மேளம் இசையுடன், தொரப்பள்ளி ராமார் கோவில் வரப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்து. ஊர்வலம், ஸ்ரீராம பால கோகுலத்தில் நிறைவு பெற்றது. அங்கு சிறப்பு பிரத்தனை நடந்து. இதில், முதுமலை ஊராட்சி கவுன்சிலர் நாராயணன், வி.எச்.பி., குமார், சண்முகம் மற்றும் விழா நிர்வாகிகள் சசங்கன், பாஸ்கரன், மோகணன், முனியப்பன், பிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !