திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1179 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று மூலவர் யோக பைரவருக்கு காலை 11:30 மணிக்கு பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அஷ்ட பைரவ பூஜைகளை சதாசிவம், பிரபாகரன் குருக்கள் நடத்தினர். தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அலங்காரத் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்தும், பெண்கள் யாகசாலை மண்டபத்தில் நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.