விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல அபிஷேகம்
ADDED :1228 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மண்டல அபிஷேகங்கள் சிவன் கோயில் வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக நடத்தினர். மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப் பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர்களால் சுவாமியை அலங்காரம் செய்த பின்னர் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதித்தனர் இந்த மண்டல அபிஷேகங்களில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.