உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவ விழா

நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவ விழா

உடுமலை; உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவ விழா நடந்து வருகிறது.உடுமலை பெரியகடை வீதியில், ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. தினமும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்து வருகிறது.கோவிலில், நேற்று சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாசுரங்களை பக்தர்கள் படித்தனர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !