உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் இருந்து ராஜபாளையம் வந்துள்ள சிலைகள்

விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் இருந்து ராஜபாளையம் வந்துள்ள சிலைகள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் இருந்து பல்வேறு விதமான கணபதி சிலைகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்கள் குழு சார்பில் தமிழக அளவில் விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவிழாவாக மட்டுமல்லாமல் விழா காலங்களில் மூன்று வேளை அன்னதானம், இலவச திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பஜனை, ஹோமங்கள், தவ பூஜைகள், பரதம், நலத்திட்ட உதவிகள் என விழா பந்தல் முழுவதும் களைகட்டும். இந்த ஆண்டு ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு மதுரை ஆதீனம் தொடங்கி வைக்க உள்ளார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்கிறார். எப்போதும் போல் இன்றி இந்த ஆண்டு மும்பையில் இருந்து மும்பை சித்தி கணபதி, வல்லப கணபதி, சுபக்ருது கணபதி, ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி சிலைகள் வடிவமைக்கப்பட்டு லாரிகள் மூலம் கோயில் அருகே கிரேன் மூலம் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பூஜைகள் அலங்கார பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !