மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
1108 days ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
1108 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (ஆக. 24) முதல் ஆக. 27 முடிய 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் தமிழ் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பிரதோஷ நாளான இன்று முதல் தினமும் காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். சுவாமி தரிசனம் செய்தவுடன் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்கவும், இரவு நேரம் மலையில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்கவும், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருவதை தவிர்க்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும் கன மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டால் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். நீர்வரத்து ஓடைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து திரும்ப வனத்துறையினர் உதவிகரமாக இருக்க வேண்டும். லேசான சாரல் மழை விழுந்தாலே பக்தர்கள் மலை ஏறுவதை நிறுத்தி வைப்பதை வனத்துறையினர் கைவிட வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
1108 days ago
1108 days ago