குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை அலங்கார பூஜை
ADDED :1173 days ago
மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், சிவன், ராஜ கணபதி, கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை, முனீஸ்வரர், கருப்பராயன், மகாமுனி, வேட்டை கருப்பன், நவகிரகங்கள், சாமுண்டீஸ்வரி, மாகாளியம்மன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு தலைமை பூசாரி பழனிசாமி, பூசாரி காளியம்மாள் ஆகியோர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.