திருப்புவனம் வந்த பூம் பூம் மாடுகள், தொட்டு வணங்கிய பெண்கள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெள்ளிகிழமை பூம் பூம் மாட்டுகாரர்கள் வீடுகள் தோறும் வந்ததால் பெண்கள் தொட்டு வணங்கி வழிபட்டனர். காளை மாடுகளை அலங்கரித்து கொம்புகளில் துணிகளை சுற்றி பட்டு சேலை, ஜரிகை துணிகள், சோழிகள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்து அவற்றை கொண்டு வீடுகள் தோறும் சென்று அந்தத்ந வீட்டில் இருப்பவர்களிடம் பலன்கள் சொல்லி அவர்கள் தரும் பணம், அரிசி உள்ளிட்டவற்றை காணிக்கையாக பெறுவது பூம்பூம் மாட்டுக்காரர்களின் வழக்கம், சமீப காலமாக தென்படாத இவர்கள் இன்று திருப்புவனம் நகரில் வலம் வந்தனர். வெள்ளிகிழமை வீட்டு வாசலுக்கு வந்த பூம் பூம் மாட்டுக்காரர்களை பெண்கள் வரவேற்று மாடுகளுக்கு வெல்லம் கலந்த அரிசியை வழங்கி அவற்றை தொட்டுவழிபட்டனர்.
பூம்பூம் மாட்டுடன் வந்த விஜய்காந்த் கூறுகையில்: மதுரை சக்கி மங்கலத்தில் நாங்கள் நாற்பது குடும்பங்கள் உள்ளோம், தென்மாவட்டம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் சென்று பலன் சொல்வது வழக்கம், முன்புமாதிரி பெரிய அளவில் வரவேற்பு ஏதும் இல்லை. ஆனாலும் ஒருசிலர் பாரம்பரியம் மாறாமல் எங்களை வரவேற்று அரிசி தான்யம் காணிக்கையாக வழங்குகின்றனர். எங்கு சென்றாலும் கால்நடையாகவே செல்வது வழக்கம், என்றார்.