உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம்

சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம்

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் நடந்த பிரத்தியங்கிரா தேவி யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேட்டுக்கடை ஆதி பரஞ்சோதி சகலோக சபையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று கோ பூஜை மற்றும் பிரித்திங்கரா தேவி யாக பூஜை நடக்கும். நேற்று காலை 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை மற்றும் உணர்வுகள் வழங்க கோ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. இந்த அமாவாசை யாக பூஜைக்கு திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !