வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :1170 days ago
திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளபரமேஸ்வரி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளபரமேஸ்வரி கோயிலில் நேற்று (26ம் தேதி) ஆணி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. விழாவில் அலங்கார ரூபத்தில் அங்காளபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.