உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை: சென்னையில் செப்.,8ல் விடுமுறை

ஓணம் பண்டிகை: சென்னையில் செப்.,8ல் விடுமுறை

சென்னை: ஒணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை சென்னையில் வரும் 8 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் செப்., 17 ம் தேதி மாற்று பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !