தசாவதாரங்களின் பொதுப்பெயர்!
ADDED :4891 days ago
வாசுதேவன் என்ற பெயரைக் கேட்டதும் கிருஷ்ணர் பெயர் நம் ஞாபகத்தில் வரும். ஆனால், கிருஷ்ணருக்கு முந்திய நரசிம்ம அவதார காலத்திலேயே, பிரகலாதன் அசுரக் குழந்தைகளுக்கு உபதேசிக்கும் போது வாசுதேவ் என்று திருமாலைக் குறிப்பிடுகிறார். எங்கும் நிறைந்தவர், எங்கும் வாசம் செய்பவர் என்பதால் திருமாலை வாசுதேவன் என்பர். கடவுள் எல்லா இடங்களில் நிறைந்திருக்கிறார் என்பது பிரகலாதனின் அசைக்கமுடியாத நம்பிக்கை, இதனாலேயே தூணிலும் இருப்பான் என்று அடித்துச் சொன்னான். கிருஷ்ணாவதாரம் மட்டுமில்லாமல் விஷ்ணுவின் எல்லா அவதாரங்களுக்கும் வாசுதேவன் என்ற பெயர் பொருந்தும் என்பர்.