காலையில் சூரியநமஸ்காரம் எத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்?
ADDED :1133 days ago
சூரியோதய வேளையில் சூரியநமஸ்காரம் செய்வது சிறப்பு. குளித்தவுடன், சூரியனை வணங்குவது என்று ஒரு மரபை முன்னோர் பின்பற்றி வந்திருக்கிறார்கள். கண் கண்ட தெய்வம் இவர் தான். கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்யாதே என்றும் ஒரு பழமொழி உண்டு. அதனால், இளமையிலேயே இவ் வழிபாடு அவசியம். சூரிய நமஸ்காரத்திற்கு விளக்கு ஏற்ற வேண்டிய கட்டாயமில்லை.