சொந்தக்காலில் நில்லுங்கள்
ADDED :1135 days ago
பிறர் நமக்கு உதவி செய்யமாட்டார்களா என்று எதிர்பார்க்கும் மக்களே இன்று அதிகம் உள்ளனர். இதற்கு காரணம் சிறுவயதில் இருந்தே நாம் பிறரை எதிர்பார்த்து இருப்பது தான்.
‘அம்மா... என் சட்டை எங்கே? என் பேனா எங்கே?’ என ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மாவை சார்ந்தே இருப்பவர்கள் தான், பிரச்னையை சந்திக்கின்றனர். குழந்தைகளுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில், அவர்களுடைய வேலைகளை பெற்றோர் செய்கின்றனர். இது அவர்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கும். எப்போதும் சொந்த காலில் நிற்பதுதான் நல்லது. உழைப்பவர்கள் தோற்றதில்லை.