தகுதியானவர்கள்
ADDED :1136 days ago
ஞானி ஒருவரிடம் சீடராக விரும்பிய இளைஞர்கள் மூவர் அவருடைய குடிலுக்கு சென்றனர். விபரம் அறிந்த ஞானி அவர்களை அழைத்து கொண்டு காய்ந்த மரக்கொம்புடன் அருகிலுள்ள சோலைக்கு சென்றார். அங்கு மரத்தில் பூத்திருந்த பூக்களை அதனைக் கொண்டு உதிர்த்து விட்டார். ‘‘இதனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்’’ என அவர்களிடம் கேட்டார்.
‘‘ தான் மட்டும் உயர்ந்தவர் என நினைத்தால் அழிவு வரும்’’ என்றார் முதலாமானவர்.
‘‘உருவத்தில் அழகானவை எல்லாம் சிறந்தவை அல்ல’’ என்றார் மற்றொருவர்.
‘‘காய்ந்த மரக்கொம்பு உயிருள்ள பூக்களுக்கு துன்பம் தந்தது. அறிவற்றவர்களால் அறிவுள்ளவர்களுக்கு துன்பம் தர முடியும்’’ என்றார் கடைசியானவர்.
அவர்களிடம், ‘‘சீடராவதற்கு தகுதியானவர்கள் தான்’’ என நிருபித்து விட்டீர்கள் என்றார் ஞானி.