உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் வெற்றி பெற கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

தேர்வில் வெற்றி பெற கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது.


பொள்ளாச்சி, ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் வெற்றி பெற லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது. இதில், மந்திர ஜபம், லட்சுமி ஹயக்ரீவர் ஸ்தோத்திரம், ஹோமம், சுவாமிக்கு அலங்காரம், நைவேத்தியம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !