தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திரிவோண தீபம்
ADDED :47 days ago
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் அடுத்த தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், மாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று கோவில் வளாகத்தில் உள்ள 32 உயர கல் கம்பத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.