அருப்புக்கோட்டையில் புனித தீர்த்த ஊர்வலம்
ADDED :1133 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில், ஐயப்பன் கோயில், லட்சுமி விநாயகர் கோயில் ஆகிய 3 கோயில்களில் செப்.1ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, வாழவந்த அம்மன் கோயிலில் இருந்து சிறுமிகள் கலசத்தில் புனித தீர்த்தத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.கோயிலில் கஜ பூஜை, கோ பூஜை, தீர்த்த சங்கிரஹணம், அஸ்வ பூஜை புனித மண் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, அங்குரார்ப்பணம் ரக்க்ஷா பந்தன், கட ஸ்தாபனம், முதல் கால பூஜை துவங்கியது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.