திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1217 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மைதரும் 108 விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஆக.26ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை நன்மைதரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர்,கைலாயநாதர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் மருதைநாயகம் செய்திருந்தார்.வேடசந்துார்: பூதிபுரம் ஊராட்சி குரும்பபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கரகம் பாலித்தல், வான வேடிக்கை, சிறப்பு பூஜையை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், அன்னதானம் நடந்தது.