சபரிமலையில் ஓணம், புரட்டாசி பூஜை ஆன்லைன் முன்பதிவு
ADDED :1134 days ago
சபரிமலை:சபரிமலையில் ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
சபரிமலையில் திருவோண பூஜைகளுக்காக செப். 6 முதல் 10 வரையிலும், புரட்டாசி மாத பூஜைகளுக்காக செப். 16 முதல் 21 வரையிலும் நடை திறந்திருக்கும். இந்தநாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமனபூஜை,களபாபிேஷகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். செப். 8 திருவோண நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் மஞ்சள் ஆடை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்படும். இதையொட்டி மூன்று நாட்கள் இங்கு பக்தர்களுக்கு பாயாசத்துடன் ஓண சாப்பாடு வழங்கப்படும். இந்த பூஜை நாட்களில் ஐயப்பனை தரிசிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து செல்லலாம்