உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா

சாயல்குடியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா

சாயல்குடி: சாயல்குடி வழிவிடு முருகன் கோயில் அருகே இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆறடி உயரம் கொண்ட விநாயகர் சிலைக்கு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இன்று மாலை 4 மணி அளவில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மலட்டாற்றங்கரையில் விநாயகர் சிலை விஷர்சனம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை இந்து திருக்கோயில் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !