ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :1176 days ago
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை பகுதியில், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த, 1980ல், கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் தற்போது, கோயில் முழுவதும் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர கற்களால் வடிவமைத்த ராஜகோபுரம் கட்டப்பட்டது. மூலவர் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், கணபதி உள்பட பரிவார சன்னதிகளில், மொத்தம் 42 கலசங்கள் அமைக்கப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு பின், இன்று(செப்.,01) காலை, ராஜகோபுரத்தின் மீதுள்ள ஐந்து கலசங்கள் உள்பட 42 கலசங்களின் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.