உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரிய மலை ரயில் நிலையத்தில் ஓணம் திருவிழா கோலாகலம்

பாரம்பரிய மலை ரயில் நிலையத்தில் ஓணம் திருவிழா கோலாகலம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் நிலையத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.

கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாவேலியை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா நேற்று சுற்றுலா பயணிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய மலை ரயில் நிலையம் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பணிமனையில் பூக்கோலங்கள் இடப்பட்டு, விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மறுநாடன் மலையாளிகள், ரயில்வே ஊழியர்கள் ஒரே வண்ண உடையணிந்து கலந்து கொண்டனர். ரயில்வே மகளிர் குழுவினர் பூக்கோலமிட்டு மாவேலியை வரவேற்றனர். சுற்றுலாப்பயணிகளும்,விழாவில் கலந்துகொண்டு பூக்கோலம் முன்பு போட்டோக்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து ஒண சத்யா எனும் 16 வகைகளில் விருந்து வழங்கப்பட்டது. கோவிட் காரணமாக 2 ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த ஓணம் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மத்தியில் பாடல்கள் பாடி அசத்தி ஓய்வு பெற்ற டிக்கெட் பரிசோதகர் வள்ளி பங்கேற்று ஓணம் பாடல்கள் பாடி அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !