உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி ஒட்டி, கடந்த, 31ம் தேதி, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று, அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சாடிவயல் சின்னாறு, நரசம்பதிக்குளம், சுண்டக்காமுத்தூர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது. சாடிவயல் சின்னாற்றில், 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் ,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நீர்நிலைகளில், சிலை கரைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !