உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்களூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணித் தேரோட்டம்

திருக்களூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணித் தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி: திருக்களூர், மாநிதி பெருமாள் கோயிலில், ஆவணித் திருவிழா தேரோட்டம் நடந்தது. துாத்துக்குடி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற நவ திருப்பதி தலங்களில் 8வது தலமும், 108 ணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமானது திருக்களூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில். இங்கு அருள்பாலித்து வரும் மாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு, சயன திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். மோலும், மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இது. பல சிறப்புகள் வாய்ந்த இக் கோயிலின் ஆவணி பெரும்விழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி வைத்தமாநிதி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஐந்தாம் திருநாள் கருடசேவை நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடந்தது. நேற்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, கோயிலை வலம் வந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா, பாலா’கோஷம் முழங்க, வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !