உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் மாவட்டத்தில் 1,226 விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,226 விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,536 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதில், 1,226 சிலைகள் நேற்று, முதல் பகுதியாக வாகனங்களில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரை, மரக்காணம் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய போலீஸ் சப் டிவிஷன்களில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக, நேற்று மதியம் 2:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் 1,400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !