உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுவதையொட்டி யாக பூஜைகள் தொடங்கியது.

முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, தீப லட்சுமி பூஜை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் விஜயன், பிரேமா விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், கோவில் அறநிலைத்துறை செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, திரைப்பட நடிகை துஷாரா விஜயன்,கோவில் பரம்பரை அறக்ககாவலர் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து உள்ளனர். கும்பாபிஷேக விழாவில் இன்று செப்டம்பர் 4 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து சந்தனக் கருப்பு கோயிலில் பூஜை செய்து, தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைத்து வருதல் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !